/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
பழைய கட்டடம் உள்ள நிலத்தில் புதிய வீடு கட்டுவோர் கவனிக்க… வேண்டியவை
/
பழைய கட்டடம் உள்ள நிலத்தில் புதிய வீடு கட்டுவோர் கவனிக்க… வேண்டியவை
பழைய கட்டடம் உள்ள நிலத்தில் புதிய வீடு கட்டுவோர் கவனிக்க… வேண்டியவை
பழைய கட்டடம் உள்ள நிலத்தில் புதிய வீடு கட்டுவோர் கவனிக்க… வேண்டியவை
ADDED : நவ 22, 2025 07:17 AM

பு திதாக நிலம் வாங்கி, அதில் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வீடு கட்ட வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும். இந்த ஆசையை எப்படி நிறைவேற்றுவது என்பதில் மக்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே அதை முறையாக செயல்படுத்த முடியும்.
புதிதாக வீடு கட்ட நிலம் வாங்கும் நிலையில் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதில் மக்களுக்கு ஓரளவுக்கு அடிப்படை விபரம் தெரியும். இருந்தாலும், பத்திரம், பட்டா தொடர்பான விபரங்களை சரி பார்ப்பதுடன், அந்த நிலம் வீடு கட்ட ஏற்றதா என்பதையும் பார்க்க வேண்டும்.
இதில் காலி நிலம் வேண்டும் என்று தேடும் நிலையில், சில இடங்களில், பழைய வீட்டுடன் நிலம் விற்பனைக்கு வரும். இவ்வாறு, பழைய வீட்டுடன் விற்பனைக்கு வரும் சொத்தை வாங்கும் நிலையில், மக்கள் வழக்கத்தைவிட கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
இது போன்ற சூழலில், ஏற்கனவே அங்கு வீடு இருக்கிறது என்பதால் புதிய வீடு கட்டுவதற்கு எவ்வித பிரச்னையும் இருக்காது என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால், விற்பனையின் போது அந்த சொத்தில் உள்ள பழைய வீடு முறையாக கட்டட அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.
இதில், சொத்தை வாங்கிய பின் அதை இடித்துவிட்டு புதிய வீடு கட்டட வேண்டும் என்று அனுமதி கோரும் போது பல்வேறு புதிய பிரச்னைகளை உரிமையாளர்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். குறிப்பாக, பழைய வீட்டை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு விண்ணப்பிக்கும் போது, பழைய கட்டடத்துக்கான திட்ட அனுமதி போன்ற விபரங்களை சம்பந்தப்பட்ட அரசு துறையினர் கேட்பர். இந்த விபரங்கள் உங்களிடம் இல்லாத நிலையில், பழைய கட்டடம் விதி மீறல் கட்டடமாக கருதப்பட்டு அதற்கான அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஆசையாக வாங்கிய நிலத்தில் அழகான வீடு கட்டலாம் என்று இருப்பவர்கள், பழைய விதிமீறல் கட்டடத்துக்காக அபராதம் செலுத்தும் நிலை ஏற்படுவது சங்கடமானதாக இருக்கும். எனவே, வீடு கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் நிலம் வாங்குவோர், அதில் ஏற்கனவே என்ன கட்டடம் உள்ளது என்று பாருங்கள்.
அவ்வாறு அங்கு கட்டடம் இருக்கும் பட்சத்தில் அது தொடர்பான விதிமீறல் புகார்கள் எதுவும் உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டியது அவசியம். அப்போது, தான் தேவையில்லாத வகைகளில் அபராதம் செலுத்துவது போன்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

