/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
லின்டெல் பீம் அமைப்பதில் ஏற்படும் குறைபாடுகள் என்ன?
/
லின்டெல் பீம் அமைப்பதில் ஏற்படும் குறைபாடுகள் என்ன?
லின்டெல் பீம் அமைப்பதில் ஏற்படும் குறைபாடுகள் என்ன?
லின்டெல் பீம் அமைப்பதில் ஏற்படும் குறைபாடுகள் என்ன?
ADDED : அக் 25, 2025 01:37 AM

த மிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் சமீப காலமாக பிரேம்டு ஸ்டிரக்ட்சர் முறையில் தான் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அஸ்திவாரம் அமைத்து, துாண்கள், பீம்கள் என்ற அடிப்படையில் இதற்கான கட்டடம் எழுப்பப்படுகிறது.
இதில் கட்டடத்தின் ஒட்டுமொத்த சுமையையும், மேல் தளத்தில் இருந்து பீம்களும், துாண்களும் தான் நிலத்துக்கு கடத்தும் என்று கூறப்படுகிறது. இதனால், பீம்கள், துாண்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்று மக்கள் இதற்கான பணியில் கவனம் செலுத்துகின்றனர்.
இந்த வகையில், கட்டடங்களில் அஸ்திவாரம் அமைத்து அதன் மேல் துாண்கள் வளரும் நிலையில், அதை இணைக்கும் நிலையில் பீம்கள் அமைக்கப்படும். இதில் நிலத்தின் தரை மட்டத்தில் பிளிந்த் பீம் அமைப்பதில் மக்கள் கவனமாக செயல்டுவதை பார்க்க முடிகிறது.
ஆனால், இதன்பின், சுவர்கள் எழுப்பும் பணிகளின் போது, லின்டெல் பீம் அமைக்கும் நிலையில் பெரும்பாலான மக்கள் உரிய கவனம் செலுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. இதில், பிரதான வாயில் கதவு, ஜன்னல் ஆகியவை அமையும் இடங்களில் லின்டெல் பீம் அமைக்கப்படுகிறது.
பொதுவாக கட்டடத்தின் மேல் பகுதியில் இருந்து கீழ் நோக்கி இறங்கும் சுமையின் அழுத்தம், கதவு, ஜன்னல் பகுதியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடாது. இந்த இடத்தில் அழுத்தங்களை குறைக்கும் நோக்கத்தில் தான் லிண்டல் பீம்கள் அமைக்கப்படுகின்றன.
இவ்வாறு அமைக்கப்படும் லின்டெல் பீம்கள் விஷயத்தில் பலரும் உரிய வழிமுறைகளை கடைப்பிடிப் பதில்லை என்று கூறப்படுகிறது. கட்டட அமைப்பியல் பொறியாளர்கள், கட்டுமான பொறியாளர் களுக்கு இதன் முக்கியத்துவம் முழுமையாக தெரியும்.
வழிமுறைகள்
l லின்டெல் பீம்கள் அமைக்கும் விஷயத்தில் வல்லுனர்கள் கூறும் வழிமுறைகளை அப்படியே கடைப்பிடிக்க வேண்டும்
l செலவு குறைப்பு நோக்கத்தில் இதை குறைப்பதற்கு முயற்சித்தால், அது கட்டடத்தின் சுமை பரவலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்
l கதவு, ஜன்னல் அமைப்பு களின் மேல், அதிக அழுத்தம் இறங்கினால், அதில் உடைப்புகள் ஏற்படலாம், இதை ஒட்டி சுவரில் விரிசல்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
l கட்டடத்தில் துாண்கள், பிளிந்த் பீம் போன்று லின்டெல் பீம்கள் அமைப்பதில் கம்பிகளின் தரம், கான்கிரீட் தரம் உள்ளிட்ட விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

