/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஹாலோ பிளாக் பயன்படுத்தலாமா... பாசிட்டிவ் என்ன...நெகட்டிவ் என்ன?
/
ஹாலோ பிளாக் பயன்படுத்தலாமா... பாசிட்டிவ் என்ன...நெகட்டிவ் என்ன?
ஹாலோ பிளாக் பயன்படுத்தலாமா... பாசிட்டிவ் என்ன...நெகட்டிவ் என்ன?
ஹாலோ பிளாக் பயன்படுத்தலாமா... பாசிட்டிவ் என்ன...நெகட்டிவ் என்ன?
ADDED : மார் 15, 2024 08:26 PM

புதிதாக வீடு கட்டுவோர் அதற்கான செலவுகளை குறைக்க வேண்டும் என்பதற்காக, பல்வேறு வகையான மாற்று பொருட்களை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், ஹாலோபிளாக் கல் சிறந்த மாற்று பொருளாக பரிந்துரைக்கப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, செங்கற்களால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, ஹாலோ பிளாக் கல் சிறந்த மாற்று பொருளாக பரிந்துரைக்கப்பட்டது.
குறிப்பாக, சுற்றுச்சூழல் பாதிப்புகளை தவிர்க்கவும், கட்டும் புதிய வீடு குளுகுளுவென இருக்கவும், ஹாலோபிளாக் கற்கள் தான் சிறந்த மாற்றுப்பொருள் என்று பலரும் நினைக்கின்றனர்.
இந்த பின்னணியில், பெரும்பாலான நிறுவனங்கள் ஹாலோபிளாக் கற்கள் தயாரிப்பில் சுறுசுறுப்பாக இறங்கியுள்ளன. இதனால் தற்போது சிறிய ஊர்களிலும் ஹாலோ பிளாக் கற்கள் தயாரிப்பு நிறுவனங்கள் வந்துவிட்டன.
செங்கல் போன்று ஹாலோ பிளாக் கற்களுக்கான தயாரிப்பு நிலை, தர கட்டுப்பாடு விதிகள் முறையாக இறுதி செய்யப்படவில்லை.
இதன் அளவுகள் தொடர்பான வரையறை உருவாக்கப்பட்டு இருந்தாலும், அதில் சுமை தாங்கும் திறன் தொடர்பான வழிமுறைகள் குழப்பமாக உள்ளது. தரக்கட்டுப்பாடு அடிப்படையில், இதை பரிசோதிப்பதற்கான வழிமுறைகளும் தெளிவாக இல்லை.
குறிப்பாக, புதிய கட்டடங்களில் ஹாலோ பிளாக் கற்களை பயன்படுத்தும் போது சில அடிப்படை விஷயங்களை, கருத்தில் கொள்ள வேண்டும். இதை பயன்படுத்தி எழுப்பப்படும் சுவர்களில், முழுமையாக பூச்சுவேலை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
வெளிப்புற பூச்சு வேலை இன்றி, ஹாலோ பிளாக் சுவர்களை அமைத்தால், சில ஆண்டுகளில் இந்த கற்கள் படிப்படியாக கரைய துவங்கும். இதில் சேர்க்கப்பட்டுள்ள கலவை, வெளிப்புற காற்றின் ஈரப்பதத்தால் மெல்ல கரையும் போது, அதில் உள்ள பொடிஜல்லிகள் உதிரும்.
அதற்காக, ஹாலோபிளாக் கற்களை முழுமையாக தவிர்க்க நினைக்காதீர்கள். இந்த வகை கற்களை முழுமையான பூச்சுவேலை செய்யக்கூடிய இடங்களுக்கு பயன்படுத்தலாம் என்கின்றனர் கட்டுமானத்துறை வல்லுனர்கள்.

