/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோஷியல் மீடியாவில் தனிநபர் விமர்சனம்; வழக்கு போடலாமா?
/
சோஷியல் மீடியாவில் தனிநபர் விமர்சனம்; வழக்கு போடலாமா?
சோஷியல் மீடியாவில் தனிநபர் விமர்சனம்; வழக்கு போடலாமா?
சோஷியல் மீடியாவில் தனிநபர் விமர்சனம்; வழக்கு போடலாமா?
ADDED : அக் 04, 2025 11:35 PM

கணவன் மற்றும் மாமியார் மீது, குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரச்னைக்கு பிறகு, கணவர் வீட்டின் முதல் மாடியில் மனைவி தனியாக வசிக்கிறார். அந்த வீட்டுக்கான மின் இணைப்பு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை, கணவன் துண்டித்தால் நீதிமன்றத்தில் பரிகாரம் கோர முடியுமா?
ஒரு பெண் திருமணமாகி எந்த வீட்டுக்கு செல்கிறாரோ, அது அவருடைய குடும்ப வீடாகும். அந்த வீட்டிலிருந்து அவரை வெளியேற்ற முடியாது. அப்பெண்ணுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க, கணவர் கடமைப்பட்டவர். அதில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டப்பிரிவு, 19ன் கீழ், இடைக்கால பாதுகாப்பு கோரியோ அல்லது நிரந்தர பாதுகாப்பு கோரியோ, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம்.
தனிப்பட்ட நபரின் வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக்கிற்கு அவரை பற்றி கேவலமாக பேசி, வாய்ஸ் மெசேஜ் மற்றும் இமேஜ் அனுப்புவோரை தண்டிக்க, சட்டத்தில் இடமுள்ளதா?.
இந்திய சாட்சிய சட்டத்திற்கு பதிலாக கொண்டு வரப்பட்ட, பாரதிய சாக் ஷிய அதீனியம் பிரிவு, 65 பி- ன் கீழ், எலக்ட்ரானிக்ஸ் ரெக்கார்டிங், வாய்ஸ் நோட்ஸ், ஸ்கிரீன் சாட்ஸ், வாட்ஸ் ஆப் மெசெஜை, பாதிக்கப்பட்டவர் தரப்பு, சாட்சியமாக கிரிமினல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால், அதனை நீதிமன்றம் பரிசீலிக்கும். அதற்குரிய அபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும். நஷ்ட ஈடு கோரியும் சிவில் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யலாம்.