/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எனக்கு ஏதோ பெரிய நோய் வந்து விட்டது! முதியோரை பாடாய்படுத்தும் 'ஹைப்போகாண்ட்ரியாசிஸ்'

ADDED : அக் 04, 2025 11:35 PM

முதுமையை ரசித்துக்கொண்டு சிலரும், சகித்துக்கொண்டு சிலரும் கடந்து வருகின்றனர். இதில், சமீபகாலங்களில், 'ஹைப்போகாண்ட்ரியாசிஸ்', அதாவது நமக்கு நோய் வந்துவிடுமோ, என்ற அச்சமே இது. இதனால், பலர் மன அழுத்தத்தை தாமாக வரவழைத்துக்கொள்வதாக கூறுகின்றனர் உளவியல் ஆலோசகர்கள் . உளவியல் ஆலோசகர் சுமித்தாசாலினி கூறியதாவது:
முதுமை வயதை எட்டுபவர்களுக்கு, உடலில் சில மாற்றங்கள், தடுமாற்றங்கள், குறைபாடுகள் ஏற்படுவது இயல்பான ஒன்று. ஆனால், சமீபகாலமாக நோய் ஏதும் இல்லாமலேயே நமக்கு நோய் ஏற்பட்டு விடுமோ என்று அச்சப்படும் முதியோர்கள், கவுன்சிலிங் வருவதை காண முடிகிறது. மருத்துவ ரீதியாக இதனை, 'ஹைப்போகாண்ட்ரியாசிஸ்' என்று கூறுவோம்.
இப்பாதிப்பு உள்ளவர்கள், சாதாரண வலிகளை கூட, பெரிய வியாதிகள் வந்துவிட்டது போன்று தாமாக பதட்டம் அடைந்து விடுவார்கள். தலைவலிக்கு கூட மருத்துவர்களை பார்க்க கிளம்பி விடுவார்கள். பரிசோதனை முடிவுகளில் ஒன்றும் இல்லை என்று வந்தாலும், சமாதானம் ஆகாமல் மீண்டும், மீண்டும் மன அழுத்தத்திற்கு சென்றுவிடுவார்கள்.
தொடர்ந்து உடல் பாதிப்பு சார்ந்து பேசுவது, அது சார்ந்த தகவல்களை தேடுவது, இறந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதை அச்சத்தில் தவிர்ப்பது, இறந்து விடுவோம் என்று அடிக்கடி பேசுவது, அடிக்கடி டாக்டர்களை சந்தித்து பேசுவது போன்ற அறிகுறிகள் இருக்கும்.
சுற்றுப்புற சூழல், பரம்பரை, சிறு வயதில் எதிர்கொண்ட உடல் நலம் சார்ந்த பிரச்னைகள், அல்லது நெருங்கிய உறவினர்கள் உடல் நல பாதிப்பால் இறப்பது, போன்றவை கூட காரணமாக இருக்கலாம். இதற்கு மருத்துவ ரீதியாகவும், மனநலம் சார்ந்தும் சிகிச்சைகள் உள்ளன.
யோகா, தியானம் போன்றவை கைகொடுக்கும். அதிக நேரம் அவர்களுடன் செலவிடுவதும்; அவர்களின் குறைபாடுகளை பற்றி பேசாமல், பழைய, அழகிய நினைவுகள் குறித்து பேசுவதும், என்னவானாலும் உயிருடன் இருப்போம் என்ற நம்பிக்கை ஏற்படுத்துவதும், சிகிச்சைக்கு முறையாக டாக்டர்களிடம் அழைத்து செல்வதும் அவசியம்.
இவ்வாறு, அவர் கூறினார்.