/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தபால் கார்டில் வந்த தேர்வு முடிவுகளை மறக்க முடியுமா!
/
தபால் கார்டில் வந்த தேர்வு முடிவுகளை மறக்க முடியுமா!
தபால் கார்டில் வந்த தேர்வு முடிவுகளை மறக்க முடியுமா!
தபால் கார்டில் வந்த தேர்வு முடிவுகளை மறக்க முடியுமா!
ADDED : அக் 08, 2025 11:31 PM
கோவை; பல ஆண்டுகளுக்கு முன்... பள்ளி பொதுத்தேர்வுகள், நாளிதழில் வெளியாகும். மற்ற வகுப்புகளின் தேர்வு முடிவுகள், தபால் கார்டில் வெளியாகி, அதை அப்படியே பொக்கிஷம் போல் பாதுகாத்த நாட்கள் உண்டு. காலங்கள் அப்படியே உருமாறி, இன்று, இணையத்தில் பார்த்துக் கொள்ளும் நிலைக்கு வந்து விட்டோம்.
அன்றில் இருந்து இன்று வரை, மறக்க முடியாத ஒரு துறை என்றால், தபால் துறையே. உலக தபால் அமைப்பு, 1874ல் சுவிட்சர்லாந்தில் துவங்கப்பட்டது. 1969ல், இதை நினைவுபடுத்தும் விதமாக, அக். 9ம் தேதி(இன்று) உலக தபால் தினமாக அறிவிக்கப்பட்டது.
1854ல் இந்திய தபால் துறை துவங்கப்பட்டது. இந்தியா முழுவதும், ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 999 தபால் நிலையங்கள் உள்ளன. இதில், ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 385 தபால் நிலையங்கள், கிராமப் பகுதிகளில் செயல்படுகின்றன. 4 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
கடிதங்கள், ஸ்டாம்ப் விற்பனை, விரைவு தபால், பார்சல் சர்வீஸ், சேமிப்பு கணக்குகள், வங்கி வசதி, காப்பீடு போன்ற திட்டங்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
இன்றைய தலைமுறையினர், தபால் துறையின் மகத்துவம் குறித்து, கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.