/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனித்தேர்வர்கள் சான்றிதழ்கள் அழிப்பு; உடனடியாக பெற்றுக்கொள்ள அழைப்பு
/
தனித்தேர்வர்கள் சான்றிதழ்கள் அழிப்பு; உடனடியாக பெற்றுக்கொள்ள அழைப்பு
தனித்தேர்வர்கள் சான்றிதழ்கள் அழிப்பு; உடனடியாக பெற்றுக்கொள்ள அழைப்பு
தனித்தேர்வர்கள் சான்றிதழ்கள் அழிப்பு; உடனடியாக பெற்றுக்கொள்ள அழைப்பு
ADDED : அக் 23, 2024 06:49 AM
கோவை : கோவை மாவட்டத்தில் 2021 மார்ச் முதல், 2022ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்கள் வரையிலான பருவங்களில், 10ம் வகுப்பு மற்றும் மேல்நிலை பொதுத்தேர்வை, ஏராளமான தனித்தேர்வர்கள் எழுதினர்.
தேர்வு முடிவுகள் வெளியாகி மதிப்பெண் சான்றிதழ்கள், தேர்வர்களுக்கு வழங்கப்பட்டன. பெறப்படாத சான்றிதழ்கள், கோவை கவுண்டம்பாளையம், அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் சதீஷ்குமார் அறிக்கை:
தேர்வுத்துறை விதிமுறைகளின்படி தேர்வு முடிவுகள் வெளியான இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தனித்தேர்வர்களால் பெறப்படாத, 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் மட்டும் அழிக்கப்பட வேண்டும். பிளஸ்1, பிளஸ்2 வகுப்பு சான்றிதழ்கள், சென்னை அரசு தேர்வுகள் இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
எனவே, 90 நாட்களுக்குள் இந்த அலுவலகத்தில் நேரில் வந்து, சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.
அல்லது ரூ.45 மதிப்புள்ள 'ஸ்டாம்ப்' ஒட்டிய சுய முகவரி எழுதப்பட்ட உறையுடன், தேர்வரின் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதம், 'ஹால் டிக்கெட்' நகல் ஆகியவற்றை இணைத்து அனுப்பி, சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். தவறினால் விதிமுறைகளின்படி, சான்றிதழ்களை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.