/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நொய்யலில் கலக்கும் கழிவுகளால் கேன்சர்; விவசாய நிலங்கள் பாதிப்பு
/
நொய்யலில் கலக்கும் கழிவுகளால் கேன்சர்; விவசாய நிலங்கள் பாதிப்பு
நொய்யலில் கலக்கும் கழிவுகளால் கேன்சர்; விவசாய நிலங்கள் பாதிப்பு
நொய்யலில் கலக்கும் கழிவுகளால் கேன்சர்; விவசாய நிலங்கள் பாதிப்பு
ADDED : பிப் 20, 2025 06:22 AM
கோவை; கோவை நகரத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளால், மாசுபடும் நொய்யல் ஆற்றை பாதுகாக்க வேண்டும் என, நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், கலெக்டருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தன் கூறியதாது: கோவையில் இருந்து பாயும் நொய்யல் ஆற்றில், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கழிவுகள் கலப்பதால், நொய்யல் படுகையில் உள்ள விவசாய நிலங்களின் மண் தன்மை கெட்டு விட்டது. நிலத்தடி நீரும் மாசுபட்டுள்ளது.
ஆற்று நீர் மாசடைந்து போனதால், கால்நடைகள் மற்றும் பொதுமக்கள், புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களால் தாக்கப்பட்டு, உயிரிழப்புகள் ஏற்பட்டு இருப்பதாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கோவையில் இருந்து திருப்பூர் வரை உள்ள நொய்யல் ஆற்றின் தென்புறம், வடபுறம் இரண்டு கிலோ மீட்டர் துாரம் உள்ள, விவசாய நிலங்களில் உள்ள தென்னை, வாழை மற்றும் கால்நடைகள் அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.
இதை தடுக்க மாவட்ட நிர்வாகம், மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நொய்யல் விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

