/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்', கே.எம்.சி.எச். சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ADDED : ஆக 26, 2025 10:42 PM
கோவை; 'தினமலர்' நாளிதழ் மற்றும் கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை சார்பில், 'நலம் பேசுவோம்-நலமுடன் வாழ்வோம்' என்ற இணையவழி கலந்துரையாடல் நிகழ்வு நடந்தது.
பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தினமலர் சார்பில், இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
பொதுமக்கள் 'வாட்ஸ் ஆப்' வாயிலாக அனுப்பிய கேள்விகளுக்கு, கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை நிபுணர் சுப்ரமணியம், மருந்தியல் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் விக்னேஷ் கந்தகுமார், ரத்த புற்றுநோய் நிபுணர் ராஜசேகர் ஆகியோர், தெளிவான விளக்கம் அளித்தனர்.
இணைய வழி நிகழ்வில், 500 பேர் நேரலையில் பங்கேற்று, டாக்டர்களின் விளக்கங்களை கேட்டறிந்தனர்.
புற்றுநோய் செல்கள் வளர்ச்சி, அறிகுறிகள், ஹீமோதெரபி, பிற சிகிச்சை முறைகள், பெண்களுக்கான புற்றுநோய் பாதிப்பு, புற்றுநோய் பாதிக்கப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர்களின் மனநிலை, பரம்பரை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு, டாக்டர்கள் விளக்கம் அளித்தனர்.