ADDED : ஆக 26, 2025 10:42 PM
பேட்டரி திருடிய இருவர் கைது
கோவை, வெங்கிட்டாபுரம், அண்ணா வீதியை சேர்ந்தவர் ரவிக்குமார். ஆட்டோவை வீட்டுக்கு முன் நிறுத்தி விட்டு இரவு துாங்கச் சென்றார். மறு நாள் ஆட்டோவை இயக்கியபோது, பேட்டரி திருடப்பட்டு இருந்தது. சாய்பாபா காலனி போலீசார் விசாரிக்கையில், வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்த நித்தீஷ்,19, ஹரிகரன்,22, ஆகியோர் திருடியதை கண்டுபிடித்தனர். அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காப்பர் கடையில் திருட்டு
கோவை, நஞ்சப்பா ரோட்டை சேர்ந்த அலி அஸ்கர், அதே ரோட்டில் மாநகராட்சி வாடகை கட்டடத்தில், 'யுனிவர்சல் இன்ஜினியரிங்' என்ற பெயரில் காப்பர் கடை நடத்தி வருகிறார். 23ம் தேதி கடையை பூட்டி விட்டுச் சென்றார். 25ம் தேதி காலை கடையை திறக்க வந்தபோது, ஷட்டர் பூட்டை உடைத்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள, காப்பர் ராடுகள் திருட்டு போயிருந்தது. காட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
13 சவரன் நகை திருட்டு
கோவை, செட்டிபாளையம் ரோடு, அன்பு நகரில் வசிப்பவர் சுகுமார்,47; தென்னக ரயில்வே சீனியர் இன்ஜினீயர். வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்குச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 13 சவரன் தங்க நகை திருடப்பட்டு இருந்தது. சுந்தராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

