/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புற்றுநோய் பரிசோதனை இலவசமாக நடக்கிறது
/
புற்றுநோய் பரிசோதனை இலவசமாக நடக்கிறது
ADDED : அக் 08, 2025 11:26 PM
கோவை; கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சார்பில், மேட்டுப்பாளையம் பஸ் டிப்போ எதிரில் அமைந்துள்ள ரோசரி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், 12ம் தேதி புற்றுநோய் கண்டறியும் இலவச முகாம் நடக்கிறது.
காலை 9 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இம்முகாமில், ரத்தத்தில் சர்க்கரை அளவு, கர்ப்பப்பை வாய் பரிசோதனை மற்றும் மார்பக பரிசோதனை ஆகிய பரிசோதனைகள், டாக்டர் பரிந்துரைப்படி இலவசமாக செய்யப்படும்.
மார்பகத்தில் கட்டி, வலி, நாள்பட்ட மாதவிடாய் தொந்தரவு, அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல், மலம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, மலத்தில் ரத்தம், பசியின்மை, உணவு விழுங்குவதில் சிரமம் அல்லது வலி, கல்லீரல் மற்றும் கணையப் புற்றுநோய், அடி வயிற்றில் கட்டி, குரலில் திடீர் மாற்றம், திடீர் எடை குறைவு, ஆறாத வாய்ப்புண், கழுத்தில் வீக்கம், கட்டி போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள், முகாமில் பங்கேற்கலாம்.
பங்கேற்போருக்கு டாக்டர் பரிந்துரைக்கும் இதர பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள், கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் சலுகை கட்டணத்தில் வழங்கப்படும். முகாமுக்கு வரும்போது பழைய மருத்துவ பதிவுகளையும் எக்ஸ்ரே, ஸ்கேன் மற்றும் மருந்துச் சீட்டுகளையும் உடன் எடுத்து வர வேண்டும்.
விவரங்களுக்கு, 73393 33485 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.