/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராம உதவியாளர் வேலை பெற சைக்கிள் ஓட்டி காண்பித்த தேர்வர்கள்
/
கிராம உதவியாளர் வேலை பெற சைக்கிள் ஓட்டி காண்பித்த தேர்வர்கள்
கிராம உதவியாளர் வேலை பெற சைக்கிள் ஓட்டி காண்பித்த தேர்வர்கள்
கிராம உதவியாளர் வேலை பெற சைக்கிள் ஓட்டி காண்பித்த தேர்வர்கள்
ADDED : நவ 09, 2025 12:55 AM

அன்னூர்: அன்னூரில், கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நேற்று நடந்தது.
அன்னூர் தாலுகாவில், ஏழு வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 294 பேருக்கு எழுத்து தேர்வு, வாசிப்பு தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.
அதன் பின்னர் விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 39 ஆக உயர்த்தப்பட்டது . இதனால் மீண்டும் ஒருமுறை விண்ணப்பிக்க வாய்ப்பு தரப்பட்டது.
இரண்டாவது முறை விண்ணப்பித்தவர்களுக்கு, அன்னூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று எழுத்து தேர்வு, வாசிப்பு தேர்வு, மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடந்தது. 79 பேருக்கு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 61 பேர் மட்டும் பங்கேற்றனர்.
டிரைவிங் லைசென்ஸ் சமர்ப்பிக்காத, ஆண்கள் மற்றும் பெண்களை சைக்கிள் ஓட்டி காண்பிக்கும்படி அலுவலர்கள் அறிவுறுத்தினர்.
தேர்வு பணிகளில் தாசில்தார் யமுனா, துணை தாசில்தார்கள் தெய்வ பாண்டியம்மாள், யாஸ்மின் ஆகியோர் ஈடுபட்டனர்.