/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சின்னியம்பாளையத்தில் 'சிக்னல்' கிடைக்கலை 'கிரீன் சிக்னல்'
/
சின்னியம்பாளையத்தில் 'சிக்னல்' கிடைக்கலை 'கிரீன் சிக்னல்'
சின்னியம்பாளையத்தில் 'சிக்னல்' கிடைக்கலை 'கிரீன் சிக்னல்'
சின்னியம்பாளையத்தில் 'சிக்னல்' கிடைக்கலை 'கிரீன் சிக்னல்'
ADDED : நவ 09, 2025 12:54 AM

சூலூர்: சின்னியம்பாளையத்தில் சிக்னல் அமைக்கப்பட்டும், இன்னும் செயல்பாட்டுக்கு வராததால், மக்கள் அவதி தொடர்கிறது.
அவிநாசி ரோடு சின்னியம்பாளையத்தில் 'யூ டேர்ன்' அகற்றப்பட்டதால், ரோட்டை கடக்க மக்கள் அவதிக்குள்ளாகினர். ஏற்கனவே இருந்த சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, போக்குவரத்து போலீசார், பழைய சிக்னல் கம்பங்களை அகற்றிவிட்டு, புதிய சிக்னல் கம்பங்களை அமைத்து, இணைப்பும் கொடுத்தனர். ஆனால், இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், '15 நாட்களுக்கு முன், புதிய சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டு, நான்கு நாட்களுக்கு முன் இணைப்பும் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வராததால், எங்களின் அவதி தொடர்கிறது. உடனடியாக சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டு வர, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.