நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்; கோவை, ஈச்சனாரியில் உள்ள மகாலட்சுமி கோவிலில், தை வெள்ளி முன்னிட்டு, திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது.
இதனையொட்டி துர்கா, மகாலட்சுமி, சரஸ்வதி தேவியருக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாலை, 6:30 முதல், 8:00 மணி வரை நடந்த பூஜையில், 109 பெண்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் சேலை, மங்கள திரவியம் வழங்கப்பட்டது.