/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பிடிபட்ட கஞ்சா, கஞ்சா சாக்லேட்டுகள்
போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பிடிபட்ட கஞ்சா, கஞ்சா சாக்லேட்டுகள்
போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பிடிபட்ட கஞ்சா, கஞ்சா சாக்லேட்டுகள்
ADDED : நவ 28, 2026 07:40 PM

அ நிறம் | அளவு
கோவை: மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சூலுார், கிணத்துக்கடவு, கே.ஜி.சாவடி, வால்பாறை, செட்டிபாளையம், கோவில்பாளையம், காரமடை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று காலை முதல் ஆறு டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் 500 போலீசார் போதைப்பொருட்களை கைப்பற்ற சோதனை நடத்தினர்.
சோதனையில் 16.2 கிலோ கஞ்சா, அரை கிலோ கஞ்சா சாக்லேட்கள், 200 கிலோ புகையிலைப் பொருட்கள், 14 போதை மாத்திரைகள், ஒரு ஊசி, ஆகியவை பறிமுதலானது. 13 கஞ்சா வழக்குகள் பதியப்பட்டன. வழக்குகளில் தொடர்புடைய, 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுதவிர, 44 மதுபாட்டில்கள், 13 லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேட்டுப்பாளையத்தில் 2, சிறுமுகையில் 1 என, தலைமறைவாக இருந்த மூவர் பிடிபட்டனர். இந்த சிறப்பு சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.
