கொடிசியா வர்த்தக வளாகத்தில் ‘முகவரி’ பிராப்பர்ட்டி எக்ஸ்போ
கொடிசியா வர்த்தக வளாகத்தில் ‘முகவரி’ பிராப்பர்ட்டி எக்ஸ்போ
UPDATED : நவ 28, 2026 07:30 PM
ADDED : நவ 28, 2026 07:30 PM

கோவை: யூனியன் பாங்க் ஆப் இந்தியா சார்பில் நடக்கும், “முகவரி” வீடு மற்றும் வீட்டுக்கடன் கண்காட்சி, நலம் மருத்துவ கண்காட்சி கொடிசியா வர்த்தக வளாகத்தில் நடக்கிறது.
கண்காட்சியில் வீடு கட்டவும், நிலம் வாங்கவும் வங்கி கடன் வாங்க சிறப்பு வட்டி விகிதத்தில் கடனுதவி அளிக்கப்படுகிறது. பல முன்னணி பில்டர்ஸ், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அரங்குகளை அமைத்துள்ளனர்.
அடுக்குமாடி சொகுசு குடியிருப்புகள், தனி வீடுகள், பண்ணை வீடுகள், வீட்டு மனைகள், ஆடம்பர பங்களாக்கள், முதியோருக்கான இல்லங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நலம் மருத்துவ கண்காட்சியில், முன்னணி மருத்துவ நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் சார்பில், பெண்களுக்கு மார்பக இலவச பரிசோதனை, கண், காது, பாப்ஸ்மியர் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
முன்னதாக, கண்காட்சியை மாவட்ட வனத்துறை அலுவலர் வெங்கடேஷ் பிரபு துவக்கி வைத்தார். யூனியன் பாங்க் மண்டல பொது மேலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் அருண் பழனிசாமி, நலம் மருத்துவ கண்காட்சியை துவக்கி வைத்தார்.
தியா பவுண்டேஷன் இயக்குனர்கள் சந்திரமவுலி, ஸ்ரீராம், யுனைடெட் லிவிங் ஸ்பேஸ் இயக்குனர் முகமது சபி, டிஎன்சிடி இணை இயக்குனர் சஞ்சனா விஜயகுமார், ஏ4 பெர்ட்டிலிட்டி சென்டர் நிர்வாக இயக்குனர் அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக நடிகை ஜனனி ஐயர் பங்கேற்றார். கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.
