தொழிலாளர்கள் குடியிருப்பு வளாகத்தில் கஞ்சா செடிகள்
தொழிலாளர்கள் குடியிருப்பு வளாகத்தில் கஞ்சா செடிகள்
ADDED : மார் 23, 2026 08:30 PM
அ நிறம் | அளவு
வடவள்ளி: ஓணாப்பாளையத்தில், வடமாநில தொழிலாளர்கள் வசித்து வந்த பகுதியில், 5 அடி உயரத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மாநகராட்சி 38வது வார்டுக்கு உட்பட்ட, ஓணாப்பாளையம், சிக்கராயபுரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில், வடமாநில கட்டுமான தொழிலாளர்கள் தங்கியுள்ளனர்.
தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதியின் முன்பு, பள்ளவாரி ஓடை புறம்போக்கு இடத்தில், கஞ்சா செடி வளர்த்து வருவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸ் ஆய்வில் அங்கு 5 அடி உயரத்தில், 3 கஞ்சா செடிகள் இருப்பது உறுதியானது.
அவற்றை வடவள்ளி போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, 40 வடமாநில தொழிலாளர்களிடம் விசாரிப்பதாக வடவள்ளி இன்ஸ்பெக்டர் சாரதா தெரிவித்தார்.
