ADDED : மார் 08, 2026 06:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: ரயிலில் கடத்தப்பட்ட 6.5 கிலோ கஞ்சா, 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
நேற்று காலை தன்பாத் - ஆலப்புழா (13351) எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப்பெட்டியில், கேட்பாரற்று இருந்த பையை, ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். அதில், 6.5 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. கடத்தியவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை - சொரனுார் (66603) மெமு ரயில் பிளாட்பாரம் எண், 2ல் நின்றிருந்தது. அதில் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தியதில், 21 மூட்டைகளில், 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரிந்தது. மூட்டைகளை கைப்பற்றிய போலீசார், கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

