ADDED : ஜூலை 27, 2025 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்; கோவை, போத்தனூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., மாடசாமி. நேற்று முன்தினம், வெள்ளலூர் செல்லும் வழியில்  ரோந்து சென்றார். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த ஒருவரை விசாரித்தார்.
போத்தனூர், நூராபாத்திலுள்ள சர்தார் சாஹிப் வீதியை சேர்ந்த நிஜாமுதீன், 34 என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருப்பதும் தெரிந்தது.
நிஜாமுதீனிடமிருந்து, 2.65 கி.கிராம் கஞ்சா, ரொக்கம் ரூ. 4 ஆயிரத்து 500 ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தார்.
எஸ்.ஐ., புகாரில், போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்ட நிஜாமுதீன் சிறையிலடைக்கப்பட்டார்.

