ADDED : ஏப் 15, 2026 03:56 PM
அ நிறம் | அளவு
போத்தனூர்: குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., தாமரைகண்ணன் போலீசாருடன் ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று புட்டுவிக்கி சாலையில் ரோந்து சென்றார். சந்தேகத்திற்கிடமாக காணப்பட்ட இருவரிடம் விசாரித்தார். அவர்கள் சுகுணாபுரம் கிழக்கு, இட்டேரி வீதியை சேர்ந்த ரெனின், 27, செந்தமிழ் நகரை சேர்ந்த அப்துல் அஜீஸ், 25 என தெரிந்தது. இருவரும் விற்பனைக்காக 1.5 கி.கிராம் கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
