நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; சாய்பாபா காலனி பகுதியில் கஞ்சா புழக்கம் இருப்பதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, கோவில்மேடு டாஸ்மாக் மதுபானக்கடை அருகில், கஞ்சா விற்பனை நடப்பது தெரியவந்தது.
அங்கு சென்ற போலீசார், அங்கிருந்த இருவரிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தால், அவர்களை சோதனை செய்தனர். அப்போது, அவர்களிடம் 1.150 கிலோ கஞ்சா, ஒரு கத்தி இருந்தது. கஞ்சா வைத்திருந்த திருப்பூரை சேர்ந்த வீரகுமார், 35 மற்றும் கோவை நஞ்சுண்டா புரத்தை சேர்ந்த விஜயகுமார், 29 ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.