/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழக்கதோஷம் விட முடியல! 'மாஜி' தலைவர்கள் ஆதிக்கம்
/
பழக்கதோஷம் விட முடியல! 'மாஜி' தலைவர்கள் ஆதிக்கம்
ADDED : செப் 07, 2025 09:28 PM
அன்னுார்; பதவி போன பின்பும், ஊராட்சித் தலைவர்கள் சிலர் ஊராட்சிகளில் ஆதிக்கம் செலுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில், 21 ஊராட்சிகள். 189 வார்டுகள் உள்ளன. கடந்த ஜன. 5ம் தேதியோடு ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் முடிந்து விட்டது. இந்நிலையில், பதவிக்காலம் முடிந்த பிறகும் ஊராட்சி அலுவலகத்தில் ஆதிக்கம் செலுத்துவதாக புகார் எழுந்துள்ளது. கரியாம்பாளையம் உழவர் விவாத குழு அமைப்பாளர் ரங்கசாமி, கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
அன்னுார் ஒன்றியத்தில், சில ஊராட்சிகளில், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள், துணை தலைவர்கள் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்து பணிகளை மேற்பார்வையிடுகின்றனர்.
துாய்மை பணியாளர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு பணிகள் செய்ய உத்தரவிடுகின்றனர். எந்தப் பணியை முதலில் செய்வது; எதை இரண்டாவது செய்வது என அறிவுறுத்துகின்றனர் .
இதனால் உண்மையில் அத்தியாவசிய பணி தாமதமாகிறது. எனவே மாவட்ட நிர்வாகம், மாஜி ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி அலுவலகத்தில் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.