/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வழிகாட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
/
வழிகாட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : செப் 07, 2025 09:29 PM

சோமனுார்; சோமனுார் காந்திநகர் வழிகாட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
சோமனுார் தீப்பெட்டி மில் ரோடு, காந்திநகரில் உள்ள வழிகாட்டி விநாயகர் கோவிலில், முன்மண்டபம் மற்றும் சுற்றுசுவர் கட்டுதல், பரிவார தெய்வங்களுக்கு கோவில் அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன
கடந்த, 5ம்தேதி மாலை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இரவு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. 6ம் தேதி மாலை, விநாயகர் பூஜை, காப்பு கட்டுதல் முடிந்து முதல்கால ஹோமம் நடந்தது.
நேற்று காலை, இரண்டாம் கால ஹோமம், பூர்ணாஹுதி நடந்தது. பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்கள், கோவிலை சுற்றி மேள, தாளத்துடன் எடுத்து வரப்பட்டன. 8:00 மணிக்கு, வழிகாட்டி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. வேலவன் காவடி குழுவின் காவடியாட்டம் நடந்தது.