/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்ககச்சான்று அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
/
அங்ககச்சான்று அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
அங்ககச்சான்று அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
அங்ககச்சான்று அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : பிப் 17, 2024 12:09 AM
- நமது நிருபர் -
தேசிய அங்கக உற்பத்தி திட்டத்தின் கீழ், சான்றளிப்புக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி, கோவை விதை சான்று அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியை, சென்னை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குனர் சுரேஷ் துவக்கி வைத்தார். விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறை சார்பாக, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து அங்ககச்சான்றளிப்பு அலுவலர்களுக்கும், தேசிய அங்கக உற்பத்தி திட்டத்துக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இணை இயக்குனர் ஜெயசெல்வின் இன்பராஜ் திட்ட செயல்பாடுகள் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு, தேசிய அங்கக உற்பத்தி திட்ட பயிற்சி புத்தகம் மற்றும் பங்கேற்பு சான்றிதழ்கள், விதைச்சான்றுகள் வழங்கப்பட்டன.