/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீலம்பூர் ரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்
/
நீலம்பூர் ரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்
ADDED : டிச 15, 2024 11:34 PM

சூலுார்; சூலுார் அருகே நீலம்பூர் பை - பாஸ் ரோட்டில் சென்ற கார், திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அப்துல்லா, 27. இவர், தனது குடும்பத்தினருடன், மைசூரில் இருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தார். நேற்று காலை, நீலம்பூர் பை - பாஸ் ரோட்டில் தனியார் மருத்துவமனை அருகே சென்ற போது, காரின் இன்ஜின் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.
இதைக்கண்ட அப்துல்லா உடனடியாக காரை ஓரமாக நிறுத்தினார். காரில் இருந்து அனைவரும் கீழே இறங்கினர்.
அப்போது, காரில் திடீரென தீப்பிடித்தது. தீ வேகமாக பரவி கார் முழுக்க பற்றி எரியத் துவங்கியது. சூலுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.