/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கார் டெலிவரி சேவை குறைபாடு முன்தொகை திருப்பித்தர உத்தரவு
/
கார் டெலிவரி சேவை குறைபாடு முன்தொகை திருப்பித்தர உத்தரவு
கார் டெலிவரி சேவை குறைபாடு முன்தொகை திருப்பித்தர உத்தரவு
கார் டெலிவரி சேவை குறைபாடு முன்தொகை திருப்பித்தர உத்தரவு
ADDED : செப் 28, 2024 05:04 AM
கோவை: கார் டெலிவரி செய்வதில் சேவை குறைபாடு செய்ததால், முன்பதிவு தொகையை திருப்பி கொடுக்க உத்தரவிடப்பட்டது.
கோவை, காந்திபுரத்தை சேர்ந்த மயிலேறு என்பவர், அவிநாசி ரோட்டிலுள்ள டிரான்ஸ்கார் என்ற நிறுவனத்தில், டாடா மின்சார கார் வாங்குவதற்காக, ஆன்லைன் வாயிலாக, 20,000 ரூபாய் செலுத்தி 2022, அக்டோபரில் முன்பதிவு செய்தார். ஆறு மாதங்களாகியும் கார் டெலிவரி தொடர்பாக எந்த தகவலும் வரவில்லை. இது குறித்து, அந்நிறுவன ஊழியர்களிடம் பேசிய போது, உறுதியான பதில் அளிக்கவில்லை. இதனால் முன் பதிவை ரத்து செய்து விட்டு, பணத்தை திருப்பி கேட்ட போது காலதாமதம் செய்தனர்.
இதனால் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் பிறப்பித்த உத்தரவில், 'எதிர்மனுதாரர்கள் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரர் செலுத்திய முன்பதிவு தொகை, 20,000 ரூபாய் திருப்பி கொடுக்க வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு தொகை, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.