/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கர்ப்பிணி மீது கார் மோதல்: கருவில் இருந்த சிசு உயிரிழப்பு
/
கர்ப்பிணி மீது கார் மோதல்: கருவில் இருந்த சிசு உயிரிழப்பு
கர்ப்பிணி மீது கார் மோதல்: கருவில் இருந்த சிசு உயிரிழப்பு
கர்ப்பிணி மீது கார் மோதல்: கருவில் இருந்த சிசு உயிரிழப்பு
ADDED : ஆக 25, 2025 09:39 PM
சூலுார்; நடந்து சென்ற கர்ப்பிணி மீது கார் மோதிய விபத்தில், கருவில் இருந்த, எட்டு மாத சிசு உயிரிழந்தது.
சூலுார் அடுத்த முத்துக்கவுண்டன் புதூரை சேர்ந்தவர் லோகமுருகன், 25, விவசாய கூலி. இவரது மனைவி தீபா, 22. எட்டு மாத கர்ப்பிணியான மனைவியை, கடந்த, 23 ம்தேதி சோமனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றார். மதியம் முத்துக்கவுண்டன் புதூரில் பஸ்சில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றனர். அப்போது, அவ்வழியே பின் னால் வந்த கார், தம்பதி மீது மோதியது. இதில், தீபா பலத்த காயமடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். டாக்டர்கள் பரிசோதித்ததில், கருவில் இருந்த, எட்டு மாத சிசு உயிரிழந்தது தெரிந்தது. இதுகுறித்து லோகமுருகன் சூலுார் போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.