ADDED : அக் 23, 2024 05:33 AM

போத்தனூர் : கோவை குமரகுரு கல்வி நிறுவனம் எப்.எம்.ஏ.இ., இணைந்து நடத்தும் வாகன தயாரிப்பு போட்டி நேற்று துவங்கியது.
செட்டிபாளையம் அடுத்த கரி மோட்டார் ஸ்பீடு வேயில், நேற்று துவங்கிய இப்போட்டியில், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் சார்பில், 60 க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்றனர். பார்முலா மாணவர், மோட்டோ மாணவர், பார்முலா கார்ட் வடிவமைப்பு மற்றும் பாரத் சோலார் வாகன சவால் என, நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடக்கின்றன.
எப்.எம்.ஏ. இ. (பிரட்டர்னிட்டி ஆப் மெக்கானிக்கல் அண்ட் ஆட்டோ மேட்டிவ் இன்ஜினியர்ஸ்) இயக்குனர் ஆதித்யா ராவ் கூறுகையில், ''இங்கு நாங்கள் செய்வது, பெரும்பாலும் கோட்பாட்டு அறிவை, நடைமுறை அறிவாக மாற்றுகிறது. எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதே இதற்கு சாட்சி. அதிநவீன தொழில்நுட்பங்களுடன் வாகனங்களை வடிவமைக்க உதவுகிறது. வருங்கால போக்குவரத்து சவால்களை சமாளிக்க, மாணவர்களை தயார்படுத்துகிறது,'' என்றார்.
போட்டி முடிவில், சிறந்த வடிவமைப்பு வாகனங்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.
