/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில் ஆலோசனை நிகழ்ச்சி: மாணவர்களுக்கு விளக்கம்
/
தொழில் ஆலோசனை நிகழ்ச்சி: மாணவர்களுக்கு விளக்கம்
ADDED : ஜன 24, 2024 11:56 PM
உடுமலை : உடுமலையில், கல்லுாரி மாணவர்களுக்கு தொழில் ஆலோசனை நிகழ்ச்சி நடந்தது.
உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி கல்லுாரி வணிகவியல் துறை மற்றும் இந்திய பட்டய கணக்காளர் அமைப்பின் கோவை கிளை சார்பில், தொழில் ஆலோசனை நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி செயலாளர் சுமதி, இயக்குனர் மஞ்சுளா முன்னிலை வகித்தனர். பட்டயகணக்காளர் நாககுமார் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் லட்சுமி தலைமை வகித்தார்.
பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் நிகழ்ச்சி குறித்து பேசினார். பட்டய கணக்காளர்கள் ராஜேஷ், சந்தீப்சபாபதி, சரண்யா, மாணவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள், தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கமளித்தனர்.
கருத்தாளர் சதீஷ் வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார். கல்லுாரி வணிகவியல் துறை தலைவர் பரமேஸ்வரி நன்றி தெரிவித்தார்.
உடுமலை, பொள்ளாச்சி சுற்றுப்பகுதியைச்சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, வணிகவியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.