ADDED : நவ 29, 2024 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: மத்திய மாநில புள்ளியியல் அலுவலகம் சார்பில் ஆண்டு தொழில் ஆய்வு திட்டக் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடந்தது.
கோவை மாவட்டத்திலுள்ள வணிக வர்த்தக நிறுவனங்களில் ஆண்டு தொழில் ஆய்வு கணக்கீடு மற்றும் விபரங்கள் வழங்குவதில் பின்பற்ற வேண்டிய விதிகள் மற்றும் செயல்முறைகள் குறித்து விளக்கப்பட்டது.
தமிழக அரசின் பொருளியல் மற்றும் புள்ளி இயல் துறை கோவை மண்டல இணை இயக்குனர் செரினா, மண்டல புள்ளியல் துணை இயக்குனர் அமுதவல்லி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
தொழில் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

