/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் சரக்கு லாரி நிறுத்தம்; போக்குவரத்து பாதிப்பால் அவதி
/
ரோட்டில் சரக்கு லாரி நிறுத்தம்; போக்குவரத்து பாதிப்பால் அவதி
ரோட்டில் சரக்கு லாரி நிறுத்தம்; போக்குவரத்து பாதிப்பால் அவதி
ரோட்டில் சரக்கு லாரி நிறுத்தம்; போக்குவரத்து பாதிப்பால் அவதி
ADDED : பிப் 10, 2025 10:38 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி வஞ்சியாபுரம் பிரிவு அருகே, வால்பாறை ரோட்டோரம் சரக்கு லாரிகள், அணிவகுத்து நிறுத்தி வைக்கப்படுவதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு, வட மாநிலங்களில் இருந்து சரக்கு ரயிலில், ஆயிரக்கணக்கான டன்கள் மூலப்பொருட்கள் ஏற்றி வரப்படுகின்றன. குறிப்பாக, சோயா மற்றும் மக்காச்சோளம் அதிகளவில் வருகின்றன.
பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் வரும் சரக்குகளை, லாரிகளில் ஏற்றி தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்கின்றனர். இதற்காக, நுாற்றுக்கணக்கான லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதுதவிர, பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் இருந்தும், பல்வேறு பகுதிகளுக்கு லாரிகளில் இளநீர், காயர் பித் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதற்காகவும், கனரக லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த லாரிகள், வஞ்சியாபுரம் பிரிவு அருகே வால்பாறை ரோட்டின் இரு பகுதிகளிலும், அணிவகுத்து நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இதனால், அவ்வழித்தடத்தில் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. சரக்கு ஏற்ற வரும் லாரிகளை ஒழுங்குபடுத்த துறை ரீதியான அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும்.
மக்கள் கூறுகையில், 'விதிமீறி ரோட்டோரம் நிறுத்தி வைக்கப்படும் கனரக லாரிகளால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. போக்குவரத்தும் பாதிப்படைகிறது. லாரிகளை இடமாற்றம் செய்து நிறுத்த போலீசாரின் நடவடிக்கை அவசியம்,' என்றனர்.

