sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வீழ்ச்சி அடையாத கேரட், பீன்ஸ்; மகிழ்ச்சியில் விவசாயிகள்: தரம், சுவையால் கேரளாவில் மவுசு

/

வீழ்ச்சி அடையாத கேரட், பீன்ஸ்; மகிழ்ச்சியில் விவசாயிகள்: தரம், சுவையால் கேரளாவில் மவுசு

வீழ்ச்சி அடையாத கேரட், பீன்ஸ்; மகிழ்ச்சியில் விவசாயிகள்: தரம், சுவையால் கேரளாவில் மவுசு

வீழ்ச்சி அடையாத கேரட், பீன்ஸ்; மகிழ்ச்சியில் விவசாயிகள்: தரம், சுவையால் கேரளாவில் மவுசு


ADDED : ஜூலை 15, 2025 10:10 PM

Google News

ADDED : ஜூலை 15, 2025 10:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் கேரட், பீட்ரூட், பீன்ஸ் விலை சரிவின்றி பல நாட்களாக தொடர்ந்து விற்பனை ஆகி வருவதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் -- அன்னுார் சாலையில், மொத்த காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு, நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து கேரட், முட்டைக்கோஸ், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் வருகின்றன.

இங்கு கொண்டுவரப்படும் காய்கறிகள் கேரளாவுக்கும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. கேரளாவில் பாஸ்ட் புட் கடைகள், ஹோட்டல்களுக்கு இங்கிருந்து தான் அதிக காய்கறிகளை வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இதனால், மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் இருந்து கேரட், பீட்ரூட், பீன்ஸ் வாங்க கேரளா வியாபாரிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மலை காய்கறிக்கு மவுசு


தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஊட்டி கேரட், பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளுக்கு மவுசு அதிகம் என்பதால், மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில், விற்பனை சூடு பிடித்துள்ளது. மேட்டுப்பாளையம் வெஜிடேபிள் சேம்பர் அப் காமர்ஸ் செயலாளர் ஹக்கீம் கூறியதாவது:

கடந்த ஒரு மாத காலமாகவே, கேரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ் போன்ற மலை காய்கறிகளின் விலை சரிவின்றி விற்பனை ஆகி வருகிறது. விவசாயிகளின் அறுவடைக்கு ஏற்றார்போல், விளைபொருட்களின் விலை கிடைப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காய்கறிகள் வரத்திலும் பெரிய மாற்றமில்லை.

* நேற்றைய நிலவரப்படி, கேரட் 3,000 மூட்டைகள் வந்தன. ஒரு கிலோ கேரட் ரூ.45 முதல் ரூ.55 வரை விற்பனை ஆனது. பீன்ஸ் ஆயிரம் மூட்டைகள் வந்தன. ஒரு கிலோ பீன்ஸ் ரூ.60 முதல் ரூ.65 வரை விற்பனை ஆனது.

* பீட்ரூட் 1,500 மூட்டைகள் வந்தன. ஒரு கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரை விற்பனை ஆனது. மிகவும் பொடி பீட்ரூட் ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனை ஆனது.

* முட்டைகோஸ் 2,000 மூட்டைகள் வந்தன. ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.14 வரை விற்பனை ஆனது. கடந்த ஒரு மாத காலமாகவே விலைகளில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கேரள வியாபாரிகள் கூறுகையில், 'ஊட்டி மலைக்காய்கறிகளுக்கு சுவையும், தரமும் அதிகம், என்றனர்.

உருளை விலை வீழ்ச்சி

உருளைக்கிழங்கு வியாபாரிகள் கூறுகையில், 'ஊட்டி உருளைக்கிழங்குகள் வரத்து நேற்று அதிகரித்த போதிலும், விலை வீழ்ச்சியடைந்தது. 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை உருளைக்கிழங்கு ரூ.1,900 முதல் ரூ.2,740 வரை விற்பனை ஆனது. கடந்த 12ம் தேதி ஊட்டி உருளைக்கிழங்கு விலை, ஒரு மூட்டை ரூ.3,120க்கு விற்பனை ஆனது. அதன் பின் விலை வீழ்ச்சியடைந்து கொண்டே வருகிறது' என்றனர். ----








      Dinamalar
      Follow us