ADDED : ஜன 06, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே ஜெ.கிருஷ்ணாபுரத்தில் விவசாய நிலத்துக்கு செல்லகூடிய பாதையை ஒருவர் ஆக்கிரமித்து, விவசாயிகள் செல்ல தடை ஏற்படுத்தி வருவதாக கூறி நேற்று முன்தினம், அப்பகுதி விவசாயிகள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால், 60 விவசாயிகளை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர்.
பின் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி உட்பட, 59 பேர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.