தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து வழக்கு

நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து வழக்கு

நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து வழக்கு


ADDED : மார் 25, 2025 12:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2025 12:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார்:

விவசாய நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில், 20 ஆண்டுகளாக கடும் போக்குவரத்து நெரிசல் நீடித்து வருகிறது. இதற்கு தீர்வாக புதிதாக புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்த, குரும்பபாளையத்தில் துவங்கி, கோவில்பாளையம், அன்னுார், பொங்கலூர், புளியம்பட்டி, சத்தி வழியாக கர்நாடக எல்லை வரை நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. நிலம் கையகப்படுத்தும் பிரிவு சார்பில் 3ஏ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஏற்கனவே உள்ள கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலை போதுமான இடவசதியுடன் உள்ளது. எனவே அதை அகலப்படுத்தலாம். தேவைப்படும் சில இடங்களில் மட்டும் குறைந்த அளவு நிலமே தேவைப்படும். மேலும் மேம்பாலம் அமைக்கலாம். இதனால் விவசாய நிலம் கையகப்படுத்தப்படத் தேவையில்லை.

மக்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவது குறையும். எனவே இதை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என முடிவு செய்யப்பட்டது.

ஏற்கனவே ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்த விவசாயிகள் விவசாய நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us