/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்து மாற்றத்திற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
/
போக்குவரத்து மாற்றத்திற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
போக்குவரத்து மாற்றத்திற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
போக்குவரத்து மாற்றத்திற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
ADDED : பிப் 04, 2025 12:54 AM
கோவை; நீதிமன்ற வளாகம் அருகில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை, வரும் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோவை மாநகர போக்குவரத்து போலீசார், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில், எந்த முன் அறிவிப்பும் இன்றி, சாலையை மாற்றி அமைத்தனர்.
இதனால், கோர்ட் அருகில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து, நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில், புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மாநகர போக்குவரத்து அதிகாரிகள் பதிலளிக்க, நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்படி, போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து, விசாரணை, வரும் 5ம் தேதிக்கு(நாளை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.