/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாசில்தார் முத்திரையுடன் போலி சான்றிதழ் தயாரித்த புரோக்கர் மீது வழக்கு
/
தாசில்தார் முத்திரையுடன் போலி சான்றிதழ் தயாரித்த புரோக்கர் மீது வழக்கு
தாசில்தார் முத்திரையுடன் போலி சான்றிதழ் தயாரித்த புரோக்கர் மீது வழக்கு
தாசில்தார் முத்திரையுடன் போலி சான்றிதழ் தயாரித்த புரோக்கர் மீது வழக்கு
ADDED : ஆக 08, 2025 09:12 PM
கோவை; தாசில்தார் அலுவலக முத்திரையுடன், போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்த புரோக்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை , பொன்னையராஜபுரத்தில் வசிக்கும் சுரேந்திரன்,50, அதே பகுதியில் நகை பட்டறை வைத்துள்ளார். இவரது மகன் அர்ஜூன், 18; வெளிநாட்டில் பள்ளி படிப்பு முடித்ததும் கோவைக்கு திரும்பினார். இந்தியாவில் மருத்துவ கல்லுாரியில் சேருவதற்காக, விண்ணப்பித்தார். வெளிநாடுவாழ் இந்தியருக்கான இடஒதுக்கீட்டில் சேருவதற்கு உறவுமுறை சான்றிதழ் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
இதற்காக, குனியமுத்துார், இடையர்பாளையம் ,மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்த வெள்ளிங்கிரி,55, என்பவரை அனுகினார். அப்போது, சான்றிழ் பெற்று தருவதாக கூறி சுரேந்திரனிடம்,10,000 ரூபாய் வாங்கினார். அதன்படி, சான்றிதழை சுரேந்திரனிடம் வழங்கினார்.
அதை வைத்து அர்ஜூன் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தார். ஆனால், தமிழ்நாடு மருத்துவ தேர்வுகுழு, கடந்த 24ம் தேதி விண்ணப்பத்தை நிராகரித்தது. இது பற்றி கேட்ட போது, சான்றிதழில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்.
கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் விசாரித்த போது, நாங்கள் கொடுக்கவில்லை என்று தாசில்தார் தெரிவித்தார். போலியான ரப்பர் ஸ்டாம்ப் தயாரித்து சீல் வைத்து, வெள்ளிங்கிரி போலி சான்றிதழ் கொடுத்தது தெரியவந்தது.
இதுகுறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் அளித்தனர். வெள்ளிங்கிரி மீது வழக்கு பதிந்துஅவரை தேடி வருகின்றனர்.