/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்ச்சைக்குரிய ஆன்லைன் நிறுவனம் மீது வழக்கு பதிவு
/
சர்ச்சைக்குரிய ஆன்லைன் நிறுவனம் மீது வழக்கு பதிவு
ADDED : பிப் 01, 2024 01:30 AM
கோவை:கோவையை தலைமையிடமாக கொண்ட, 'மைவி3 ஆட்ஸ்' என்ற நிறுவனம் ஆன்லைனில், விளம்பரங்கள் பார்த்து 'லைக்' போடுவது, பொருட்களை வாங்குவது வாயிலாக வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் என விளம்பரம் செய்தது.
லட்சக்கணக்கானோர் இந்நிறுவனத்தில், முதலீடு செய்துள்ளதாகவும், தினம், 100 முதல், 600 ரூபாய் வரை பணம் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மக்களிடமிருந்து பணம் வசூலித்து மோசடி செய்து வருவதாக, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில், மாநகர சைபர் கிரைம் போலீஸ் எஸ்.ஐ., புகார் அளித்தார்.
இதன்படி, மாநகர குற்றப்பிரிவு போலீசார் அந்த ஆன்லைன் நிறுவனத்தில் விசாரணை நடத்தினர்.
இதைக் கண்டித்து, 10,000த்துக்கும் மேற்பட்டோர் நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் திரண்டனர்.
பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் காரணமாக, பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டதாக, வி.ஏ.ஓ., ராமசாமி அளித்த புகார்படி, நிறுவனத்தின் உரிமையாளர் சத்தியானந்த் உள்ளிட்டோர் மீது, மூன்று பிரிவுகளின் கீழ் சிங்காநல்லுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.