/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.71 லட்சம் மோசடி; தம்பதி மீது வழக்கு
/
ரூ.71 லட்சம் மோசடி; தம்பதி மீது வழக்கு
ADDED : ஆக 31, 2025 11:33 PM
போத்தனூர்; கோவைபுதூர், வி பிளாக்கை சேர்ந்தவர் முருகேசன், 62 ; வீடு கட்டி விற்பனை செய்து வருகிறார். கடந்தாண்டு ஜூலையில் இவருக்கு சஞ்சய் ரெட்டி, லாவண்யா ஆகியோர் அறிமுகமாகினர். இருவரும் தாங்கள் வெளிநாடுகளில் படிக்க மற்றும் வேலைக்கு ஆட்களை அனுப்புவதாகவும், சினிமா பட தயாரிப்பாளர்களாக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
தங்கள் தொழிலில் முதலீடு செய்தால், இரு மடங்கு லாபம் கிடைக்கும் என கூறவும், முருகேசன் அவர்களுக்கு, கடந்தாண்டு ஜூலை 11 முதல் இவ்வாண்டு மார்ச் 25 வரை பல தவணைகளில், 71 லட்சம் ரூபாயை, தனது வங்கி கணக்கிலிருந்து அனுப்பினார்.
தம்பதி கூறியதுபோல எவ்வித லாபமும் தரவில்லை. தொகையையும் திரும்ப தராமல் ஏமாற்றியுள்ளனர். முருகேசன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் தம்பதியை தேடுகின்றனர்.