/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையை சேதப்படுத்திய மூவர் மீது வழக்கு
/
சாலையை சேதப்படுத்திய மூவர் மீது வழக்கு
ADDED : அக் 30, 2025 11:21 PM
அன்னுார்:  பஞ்சாயத்து சாலையை பொ க்லைன் இயந்திரத்தால் சேதப்படுத்திய மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
குருக்கிளையம்பாளையத்தில், லட்சுமி கார்டனில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு முதல் வீதியில் ஊராட்சிக்கு சொந்தமான பாதை உள்ளது.
இதற்கு அருகில் உள்ள தோட்டத்தில் வசிப்பவர் சோமசுந்தரம், 75. அவரது மகன்கள் அருண்குமார், 45, கார்த்திகேயன், 40, ஆகியோர் இது எங்கள் தோட்டத்திற்கு சொந்தமான இடம் என்று கூறி பொக்லைன் இயந்திரம் மூலம் 20 அடி அகலம் உள்ள பஞ்சாயத்து சாலையை சேதப்படுத்தினர்.
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் அருணாசலம் என்பவர் அளித்த புகாரின் பேரில் அன்னுார் போலீசார் பாதையை சேதப்படுத்திய மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

