/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்துக்கு இடையூறு த.வெ.க., நிர்வாகிகள் மீது வழக்கு
/
போக்குவரத்துக்கு இடையூறு த.வெ.க., நிர்வாகிகள் மீது வழக்கு
போக்குவரத்துக்கு இடையூறு த.வெ.க., நிர்வாகிகள் மீது வழக்கு
போக்குவரத்துக்கு இடையூறு த.வெ.க., நிர்வாகிகள் மீது வழக்கு
ADDED : ஏப் 28, 2025 04:10 AM
கோவை :போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, த.வெ.க., மாவட்ட செயலாளர் மீதும், தி.மு.க., கொடியை சேதப்படுத்தியதாக, கட்சியினர் இருவர் மீதும், போலீசார் வழக்குப்பதிந்தனர்.
தமிழக வெற்றிக் கழக கோவை மண்டல ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான இரண்டு நாள் கருத்தரங்கு நேற்று முன்தினம், கோவை குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்க விஜய், கோவை விமான நிலையம் வந்தார்.
அப்போது ரசிகர்கள், தொண்டர்கள் பெருமளவில் திரண்டதால், அங்கு தள்ளு, முள்ளு ஏற்பட்டது. விஜய் சென்ற வாகனத்தின் பின்னால், கார் மற்றும் பைக்குகளில், ஏராளமானோர் பின் தொடர்ந்தனர். சிலர் கீழே விழுந்தும் காயமடைந்தனர். பீளமேடு, சிட்ரா ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
கிராம நிர்வாக அலுவலர் லட்சுமி புகாரின் பேரில், பீளமேடு போலீசார் த.வெ.க., கோவை மாவட்ட செயலாளர் சம்பத் மீது, போக்குவரத்துக்கு இடையூறு செய்தல், விதிகளை மீறி கூட்டம் கூட்டுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர். போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக, பலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று தமிழக துணை முதல்வர் உதயநிதி கோவை வருகையை முன்னிட்டு, பீளமேடு பகுதியில் நடப்பட்டிருந்த தி.மு.க., கொடியை, த.வெ.க.,வினர் கிழித்து சேதப்படுத்தியதாக, காளப்பட்டியை சேர்ந்த தி.மு.க., நிர்வாகி விக்னேஷ், பீளமேடு போலீசார் புகார் அளித்தார்.
அதன்பேரில் த.வெ.க., நிர்வாகிகள் ஒட்டன்சத்திரம் ஜவ்வாதுபட்டியை சேர்ந்த செல்லமுத்து, 26, தேவசின்னம்பட்டியை சேர்ந்த மனோஜ்குமார், 21 ஆகியோர் மீதும், போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை விடுவித்தனர்.

