/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆயுதங்கள் பதுக்கல் சிறை கைதிகள் இருவர் மீது வழக்கு
/
ஆயுதங்கள் பதுக்கல் சிறை கைதிகள் இருவர் மீது வழக்கு
ஆயுதங்கள் பதுக்கல் சிறை கைதிகள் இருவர் மீது வழக்கு
ஆயுதங்கள் பதுக்கல் சிறை கைதிகள் இருவர் மீது வழக்கு
ADDED : நவ 02, 2025 02:14 AM
கோவை: கோவை மத்திய சிறை டவர் பிளாக்கில், சோதனை நடத்தப்பட்டதில், மூன்றாவது 'ஷட்டர்' பகுதியில், 1.5 மீ., நீளமுள்ள இரும்பு தட்டு, ஆயுதம் போல் மடக்கி மறைத்து வைக்கப் பட்டிருந்தது.
விசாரணையில், ரத்தினபுரியை சேர்ந்த கவுதம், 30, அவருடன் ஒரே அறையில் தங்கியுள்ள நெல்லை மாவட்டம், வடக்கு தாலையூத்தை சேர்ந்த பிரவீன் ராஜ், 34, ஆகியோர், ஆயுதத்தை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.
அக்., 28ம் தேதி அதிகாரிகள் சிறையில் சோதனை செய்த போது, கவுதம் வைத்திருந்த, 50 கிராம் கஞ்சாவை வார்டன்கள் கைப்பற்றினர். விசாரித்தபோது, தான் அதை கொண்டு வரவில்லை என, போலீசாரிடம் கவுதம் தெரிவித்துள்ளார்.
சிறை அதிகாரிகளை பழி வாங்க, தன்னுடன் தங்கியிருந்த பிரவீன்ராஜுடன் சேர்ந்து சிறையில் கலவரம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார். பிரச்னை ஏற்படும் போது, இரும்பு தட்டை பயன்படுத்த திட்டமிட்டிருந்தது, போலீஸ் விசாரணையில் தெரிந்தது.
சிறை வார்டன் சிவராஜன், கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் அளித்தார். இரு பிரிவுகளில் வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.

