/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொது ஒதுக்கீட்டுக்கு பதிலாக பணம் செலுத்துவதற்கு எதிர்ப்பு விதிகளை திருத்தக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு
/
பொது ஒதுக்கீட்டுக்கு பதிலாக பணம் செலுத்துவதற்கு எதிர்ப்பு விதிகளை திருத்தக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு
பொது ஒதுக்கீட்டுக்கு பதிலாக பணம் செலுத்துவதற்கு எதிர்ப்பு விதிகளை திருத்தக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு
பொது ஒதுக்கீட்டுக்கு பதிலாக பணம் செலுத்துவதற்கு எதிர்ப்பு விதிகளை திருத்தக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு
ADDED : ஜன 16, 2025 03:49 AM
கோவை : திறந்தவெளி பொது இட ஒதுக்கீட்டுக்கு பதிலாக, பணமாக செலுத்தலாம் என்கிற தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி, சென்னை ஐகோர்ட்டில், 'கோயமுத்துார் கன்ஸ்யூமர் காஸ்' என்கிற அமைப்பு, பொது நல வழக்கு தொடர்ந்திருக்கிறது.
ஒரு மனைப்பிரிவு உருவாக்கும்போது, பொதுப்பயன்பாட்டுக்காக, 10 சதவீத இடத்தை திறந்தவெளியாக ஒதுக்கி, தானப்பத்திரமாக, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
2019ல் கட்டுமான விதிகளில் சில திருத்தங்கள் செய்து, அரசாணை வெளியிடப்பட்டது. அதில், 3,000 சதுர மீட்டருக்கு குறைவான லே-அவுட்டுகள், 10 சதவீத பொது ஒதுக்கீடு இடம் ஒதுக்க வேண்டியதில்லை.
10 ஆயிரம் சதுர மீட்டர் வரையிலான கட்டடங்கள் மற்றும் மனைப்பிரிவுகள், 10 சதவீதம் இடம் வழங்கலாம் அல்லது அதற்குரிய நில வழிகாட்டி மதிப்பை செலுத்தலாம் என கூறப்பட்டிருக்கிறது. அதனால், வழிகாட்டு மதிப்பை மட்டும் செலுத்தி விட்டு, 10 சதவீத திறந்தவெளி இடத்தை, சந்தை விலைக்கு விற்று விடுகின்றனர்.
உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்கப்படும், பொது இடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பூங்கா, குழந்தைகள் விளையாட்டு மைதானம் உருவாக்கப்படும்.
சில இடங்களில் குடியிருப்போர் நலச்சங்கத்தினர், விருப்பத்துக்கேற்ப பயன்படுத்துவது வழக்கம். இப்போது அவ்விடம் ஒதுக்கப்படாமல், விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான இடமே இல்லாத சூழல் உருவாகிறது.
பொதுமக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களை சுட்டிக்காட்டி, கட்டட விதி 2019ல் விதி எண்: 41 மற்றும், 47ல் தகுந்த மாற்றங்கள் செய்ய வேண்டுமென, 'கோயமுத்துார் கன்ஸ்யூமர் காஸ்' என்கிற அமைப்பு, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
அரசு தரப்பில் செவிசாய்க்காததால், இவ்விதிகளை சட்ட விரோதமானது என உத்தரவிட கோரி, சென்னை ஐகோர்ட்டில், செயலாளர் கதிர்மதியோன் பொது நல வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

