/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிவப்பு - நீல விளக்கு பொருத்திய 29 வாகனங்கள் மீது வழக்கு பதிவு
/
சிவப்பு - நீல விளக்கு பொருத்திய 29 வாகனங்கள் மீது வழக்கு பதிவு
சிவப்பு - நீல விளக்கு பொருத்திய 29 வாகனங்கள் மீது வழக்கு பதிவு
சிவப்பு - நீல விளக்கு பொருத்திய 29 வாகனங்கள் மீது வழக்கு பதிவு
ADDED : மார் 26, 2025 11:16 PM

கோவை; போலீஸ் வாகனங்கள் போல் சிவப்பு - நீல விளக்குகள் பொருத்திய, 29 தனியார் வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விளக்கை பறிமுதல் செய்தனர்.
போலீஸ் வாகனங்கள், ஆம்புலன்ஸ், அரசு அதிகாரிகளின் வாகனங்கள் வருகையை, பிற வாகன ஓட்டிகள் கண்டறியும் வகையில், அரசு வாகனங்களில் சிவப்பு - நீல வண்ணங்களில் (சைரன் லைட்) விளக்குகள் பொருத்தப்படுகின்றன. அரசியல் தலைவர்கள் வருகையின் போதும், சைரன் லைட் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், சமீப காலமாக சில தனியார் வாகனங்களில், இது போன்ற சிவப்பு - நீல வண்ண விளக்குகள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், கவுன்சிலர், எம்.எல்.ஏ., மேயர் உட்பட பலரின் கார்களில், இது போன்ற விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு அனுமதி கிடையாது.
இந்த விளக்குகள் அனைத்தும், எல்.இ.டி., லைட்டுகளால் தயார் செய்யப்பட்டவை. இரவு நேரங்களில் சிவப்பு - நீலம் என மாறி, மாறி ஒளிரும் இந்த விளக்குகள், எதிர் திசையில் வரும் வாகன ஓட்டிகள் கண்களில் நேரடியாக வெளிச்சத்தை பாய்ச்சி, கூச செய்வதால் விபத்து ஏற்படுகிறது.
இது குறித்து நமது நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து தற்போது, சிவப்பு - நீல விளக்கு பொருத்திய 29 வாகனங்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து, விளக்குகளை பறிமுதல் செய்தனர்.