/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேவல் சண்டையில் ஈடுபட்ட 22 பேர் மீது வழக்குப்பதிவு
/
சேவல் சண்டையில் ஈடுபட்ட 22 பேர் மீது வழக்குப்பதிவு
சேவல் சண்டையில் ஈடுபட்ட 22 பேர் மீது வழக்குப்பதிவு
சேவல் சண்டையில் ஈடுபட்ட 22 பேர் மீது வழக்குப்பதிவு
ADDED : ஜன 19, 2025 12:45 AM
தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில், சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட, 22 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அதேபோல, பொங்கல் விடுமுறையில், இப்பகுதியில் சேவல் சண்டை சூதாட்டமும் சிறப்பாகவே நடந்துள்ளது.
இந்தாண்டு, சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீசார், தனிப்படையை அமைத்து தேடுதல் நடத்தினர்.
இதில், தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில், சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட, 8 பேர், பேரூரில் 3 பேர், ஆலாந்துறையில், 11 பேர் என, மொத்தம், 22 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 8 சேவல்கள், ரூ.37,420 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

