UPDATED : நவ 17, 2026 03:44 PM
ADDED : நவ 17, 2026 03:44 PM
அ நிறம் | அளவு
அன்னூர்: அன்னூரில், சத்தி சாலையில், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் செயல்படுகிறது.
இங்கு பணிபுரிந்து வந்த மாஜிஸ்திரேட் கடந்த ஏப்ரலில் வேறு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். புதிய மாஜிஸ்திரேட் நியமிக்கப்படவில்லை. மேட்டுப்பாளையம் மாஜிஸ்ரேட் கூடுதல் பொறுப்பாக, அன்னூர் கோர்ட்டில் வாரத்தில் ஓரிரு நாட்கள் பணிபுரிகிறார்.
பல வழக்குகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. முழு நேர மாஜிஸ்திரேட் இல்லாததால், வழக்கு தொடுத்தோர், பாதிக்கப்பட்டோர், சாட்சிகள் என பல தரப்பினரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
