/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்கல்
/
ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்கல்
ADDED : ஜூலை 09, 2025 09:55 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில் ஓய்வு பெற்ற துாய்மை பணியாளர்களுக்கு, பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி தலைவர் சியாமளா தலைமை வகித்தார். துணை தலைவர் கவுதமன், நகர் நல அலுவலர் தாமரைக்கண்ணன் முன்னிலை வகித்தனர்.
துாய்மை பணியாளர் நல வாரிய தலைவர் ஆறுச்சாமி பேசுகையில், ''துாய்மை பணியாளர் நல வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதில், 10 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
''இதற்கான நிதி ஆதாரமும் வழங்கப்பட்டுள்ளது. நலவாரியம் வாயிலாக துாய்மை பணியாளர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும். மேலும், பொள்ளாச்சி நகரில், துாய்மை பணிக்காக ரோபோடிக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார். தொடர்ந்து, ஐந்து துாய்மை பணியாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்பட்டன.

