/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு
ADDED : ஜூன் 12, 2025 10:13 PM
பெ.நா.பாளையம்,; 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆங்கில வழி கல்வியில் மாணவியர், ஹரி சுபாஷினி முதலிடமும், விஜயஸ்ரீ இரண்டாம் இடமும், பத்மஸ்ரீ மூன்றாம் இடமும் பெற்றனர்.
தமிழ் வழி கல்வியில் மாணவியர் விகாஸ்ரீ, முதலிடம், கோபிகா இரண்டாம் இடம், லாவண்யா மூன்றாம் இடம் பெற்றனர். இவர்களுக்கு நரசிம்மநாயக்கன்பாளையம் மயூரா பேக்கேஜிங் நிர்வாக இயக்குனர் பாலசுந்தரம் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பத்தாயிரம் ரூபாய், இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்கு, 7500, மூன்றாம் இடம் பெற்ற மாணவிக்கு, 5000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தார்.
இதே போல நரசிம்மநாயக்கன்பாளையம் ஜெகதீஷ், ஆங்கில வழி கல்வி முதலிடம் பெற்ற மாணவிக்கு, 5000 ரூபாய், இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்கு, 3 ஆயிரம் ரூபாய், மூன்றாம் இடம் பெற்ற மாணவிக்கு, 2000 ரூபாய் வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பிரேம்குமார், உடற்கல்வி ஆசிரியர் தனக்குமார், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.