/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஜாதியை சொல்லி ஓட்டு கேட்கும் அரசியலால் சமத்துவம் அமையாது'
/
'ஜாதியை சொல்லி ஓட்டு கேட்கும் அரசியலால் சமத்துவம் அமையாது'
'ஜாதியை சொல்லி ஓட்டு கேட்கும் அரசியலால் சமத்துவம் அமையாது'
'ஜாதியை சொல்லி ஓட்டு கேட்கும் அரசியலால் சமத்துவம் அமையாது'
ADDED : டிச 14, 2025 05:02 AM
கோவை: கோவையில், 'பொதுப்பள்ளிகளுக்கான மாநில வேடை சமூக ஜனநாயக கையேடு' என்ற நுால் வெளியீட்டு விழா, திவ்யோதயா அரங்கில் நடந்தது.
நுாலை, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வெளியிட, புலவர் செந்தலை கவுதமன் பெற்றுக்கொண்டார்.
பாலகுருசாமி பேசியதாவது:
சமத்துவ சமூதாயம் அமைய, முதலில் பெற்றோர்களுக்கு சமூக நீதி சிந்தனை இருக்கவேண்டும். அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு, சமத்துவத்தை சொல்லி வளர்த்தால்தான் ஜாதியற்ற சமூகம் உருவாகும்.
நான் பள்ளியில் படித்த காலத்தில், என்னுடன் படிக்கும் சக மாணவரை வீட்டுக்கு அழைத்து சென்ற போது, என் பெற்றோர் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இன்றைக்கு நிலைமை மாறி இருக்கலாம். ஆனால் முழுமையாக மாறவில்லை.
இதை அரசுகள் தான் மாற்ற வேண்டும். அரசுதான் சட்டங்களை கடுமையாக்க வேண்டும்.
ஜாதியை சொல்லி ஓட்டு வாங்கி, ஆட்சி அமைக்கும் அரசுகளால் மக்களிடம் சமத்துவத்தையும், சமூக நீதியையும் உருவாக்க முடியாது.பெற்றோர், ஆசிரியர், அரசு இவை மூன்றும் சமூக நீதி சிந்தனையுடன் செயல்பட்டால்தான், ஜாதியற்ற சமுதாயம் உருவாகும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
புலவர்கள் அப்பாவு, பேராசிரியர் உஷா, நுாலாசிரியர் பிரின்ஸ் கஜேந்திர பாபு பங்கேற்றனர்.

