/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மார்கழி உற்சவத்திருவிழாவில் வரும் 16 முதல் சொற்பொழிவு
/
மார்கழி உற்சவத்திருவிழாவில் வரும் 16 முதல் சொற்பொழிவு
மார்கழி உற்சவத்திருவிழாவில் வரும் 16 முதல் சொற்பொழிவு
மார்கழி உற்சவத்திருவிழாவில் வரும் 16 முதல் சொற்பொழிவு
ADDED : டிச 14, 2025 05:02 AM
சுந்தராபுரம்: சுந்தராபுரத்தில் உள்ள செங்கப்பக்கோனார் திருமண மண்டபத்தில் மார்கழி உற்சவ திருவிழா, வரும் 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, பகவானின் மகிமை போற்றும் பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சிகள் தினமும் நடக்கின்றன.
தினமும் மாலை 5:30 மணிக்கு, பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சிகள் துவங்குகின்றன. வரும் 16ம் தேதி 'திருப்பம் தரும் திருப்புகழ்', என்ற தலைப்பில் ராம விஜயக்குமார், 17ம் தேதி 'திருவாக்கும் பெருவாக்கும்' என்ற தலைப்பில் பவானி தியாகராஜன், 18ம் தேதி 'அருள் தரும் அண்ணாமலை' என்ற தலைப்பில் கவிஞர் பாலசுப்ரமணியம், 19ம் தேதி 'வினைகள் தீர்க்கும் பஞ்சபுராணம்' என்ற தலைப்பில் நித்யா அருணாசலம், 20ம் தேதி 'சங்கீதப் பிரியா பஜன் மண்டலி' என்ற தலைப்பில் ஜோதி பார்வதி, 21ம் தேதி 'அரங்கன் உலாவும் அழகுக்கோலமும்' என்ற தலைப்பில் பேராசிரியர் விஜயசுந்தரி, 22ம் தேதி 'அண்டம் எல்லாம் பூத்தவள்' என்ற தலைப்பில், அனந்த கிருஷ்ணன் ஆகியோர் சொற்பொழிவு நிகழ்த்துகின்றனர்.
தினந்தோறும் துவக்க நிகழ்வு திருமுறை பாராய ணம், பேரூர் சதய விழாக் குழுவினர் வழங்கும் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

