/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாய நிலத்தில் காஸ்டிங்; மண் கொட்டுவதால் பாதிப்பு
/
விவசாய நிலத்தில் காஸ்டிங்; மண் கொட்டுவதால் பாதிப்பு
விவசாய நிலத்தில் காஸ்டிங்; மண் கொட்டுவதால் பாதிப்பு
விவசாய நிலத்தில் காஸ்டிங்; மண் கொட்டுவதால் பாதிப்பு
ADDED : ஜூலை 14, 2025 11:16 PM
அன்னுார்; 'விவசாய நிலத்தில், காஸ்டிங் மண் கொட்டுவதால் பாதிப்பு ஏற்படுகிறது,' என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேல் கதவுகரை, கீழ்கதவுகரை மற்றும் வெள்ளாளபாளையம், கிராம பொதுமக்கள் நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது :
கரியாம்பாளையம் ஊராட்சியில், மேல் கதவுகரையில், ஓரிடத்தில் தினமும் நூற்றுக்கணக்கான லோடு காஸ்டிங் மண் கொட்டப்படுகிறது. அந்த மண் அங்கு சலிக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. சலிக்கப்பட்டதன் மீதி மண்ணை அப்பகுதியில் கொட்டுகின்றனர். இதன் மேல் மழை நீர் இறங்கி சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் மாசடைகிறது.
சம்பந்தப்பட்டவர்களிடமும், ஊராட்சி அலுவலகத்திலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் புகார் தெரிவித்தும் பயனில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.